Breaking News

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு பேரிடியாய் வந்த தகவல்


எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

5500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று திருப்பியனுப்பபட்டமையே இதற்கான காரணம் என்று லாப் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் சார்ந்த பத்திரத்தை திறக்க முடியாமை மற்றும் 4.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த முடியாமையும் இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(Vavuniyan) 

No comments