Breaking News

அமைச்சு பதவிகளில் இருந்து வெளியேறுகிறது சுதந்திரக்கட்சி


அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.

சுதந்திர கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கமொன்றை அமைக்கவும், எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும் அரச தலைவரிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்துக்கு இணங்கவில்லையாயின், அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விலகுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(Vavuniyan) 

No comments