நம்பிக்கையில்லா பிரேரணை: ஐ.தே.க.வின் நிலைப்பாடு
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கவில்லை. எனினும் அதனை நிறைவேற்றுவதற்கு முன்னர் அடுத்த கட்ட வேலைத்திட்டங்களுக்கு கட்சி தலைவர்கள் உடன்பட வேண்டும் என்று ஐ.தே.க. உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி நீக்கப்படும். அதன் பின்னர் அமைச்சரவையின் அதிகாரங்கள் ஜனாதிபதி வசமாகும். எனவே நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னரான வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்றம் இணங்க வேண்டும்.
அதனை விடுத்து நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றி பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான தற்போதைய பிரதமரை பதவி விலக்கி , மீண்டும் பிரிதொரு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே பிரதமராக்குவதை ஏற்க முடியாது என்று அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan)
No comments