இனி லிட்ரோ எரிவாயு அரைவாசியாக குறைகின்றது
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை அரைவாசியாக குறைப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பொருளாதார சிக்கலில் இருந்து நாடு மீண்டெழும் வரை, சமையல் எரிவாயு விநியோகத்தை நகர் பகுதிகளுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
இதன்படி, இதுவரை காலம் நாளொன்றிற்கு 60,000 முதல் 80,000 வரை விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை, இனி 30,000 வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
எரிவாயு கேள்வியை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 30 மில்லியன் டொலர் தேவை எனவும், தற்போதுள்ள நிலைமைக்கு அமைய அது சிரமமான விடயமாக உள்ளது என்று அவர் குறிப்பிடுகின்றார். (Vavuniyan)
No comments