Breaking News

மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் பலி


யாழ்பபாணம் கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று  உயிரிழந்துள்ளார்.

தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோதே அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

சம்பவத்தில் கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி என்ற 59 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (Vavuniyan) 

No comments