Breaking News

இலங்கையில் வாழும் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம்?


இலங்கையில் வாழும் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம். அதனூடாக இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவிட்டுள்ளதாகவும், தென்னிந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

இது முற்றிலும் தவறானதும், போலியான செய்தியாகும். இவ்வாறான அவதூறை ஏற்படுத்தும் செயற்பாடுகளினூடாக இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் உறவுகளில் பாதிப்பு ஏற்படாது எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. (Vavuniyan)



No comments