Breaking News

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு வரையறை கட்டணம் – அதிரடி அறிவிப்பு வெளியானது


இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நண்பகல் ஒரு மணி முதல் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளுக்காக 1000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 5000 ரூபாவிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

எனினும், பஸ், லொறி மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் வரையறை கிடையாது என பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது. (Vavuniyan) 

No comments