அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சகல மதுபானசாலைகளும் எதிர்வரும் 13ம் திகதி மற்றும் 14ம் திகதிகளில் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ் உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. (Vavuniyan)
No comments