மஸ்தான் மக்களை ஏமாற்றினார் - செ. மயூரன்
இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.....
தற்போது நாட்டு மக்களால் வெறுக்கத்தக்க ஆட்சியாளர்களும், அரசும் இந்த நாட்டை பலாத்காரமாக ஆண்டுவருகின்றது. இந்த சூழ்நிலையில் வன்னிமக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இராஜாங்க அமைச்சுப்பொறுப்பினை ஏற்றுள்ளமை வன்னி மக்களிடத்தில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மூழ்க்கிக்கொண்டிருக்கும் கப்பலாகவுள்ள இந்த அரசில் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்க்காமல் மறுத்துவந்தநிலையில் இவர் பதவியை பெற்று பலிக்கடாவாக மாறியுள்ளார்.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் அரசியலுக்கு வருகைதருவதற்கு முன்னரே வன்னிப்பகுதியில் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்துவந்த அவரது தந்தையார் தற்போது உயிருடன் இருந்திருந்தால் இவர் அமைச்சுபொறுப்பினை ஏற்றதை விரும்பியிருக்கமாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.
குறித்த அமைச்சுப்பதவி மூலம் அவர் எதனை சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறார். குறிப்பாக அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் சமூகத்திற்காவது இதனால் எதாவது இலாபம் இருக்கின்றதா? மாறாக வாக்களித்தமக்களுக்கும், வன்னிமக்களுக்கும் பாரிய இழுக்கையும், அவமானத்தினையுமே அவர் ஏற்ப்படுத்தியுள்ளார்.
அத்தியவசிய தேவைகளை பெற்றுகொள்ளமுடியாமல் எமது மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இயலாத்தன்மையாலேயே இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இப்படியான அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியினை பொறுப்பெடுத்துள்ளமை வன்னிமக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்ப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக தனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்வதுடன் கொடுங்கோல் அரசுக்கு வழங்கி வருகின்ற ஆதரவினையும் விலக்கிக்கொள்ள வேண்டும்.
அத்துடன் இவ்வாறான இக்கட்டான நிலமைகளிலாவது அரசியலை புறம்தள்ளி, அரசின் சூழ்ச்சிக்கு மயங்காது மக்களின் அவாக்களை புரிந்து நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
No comments