Breaking News

ஜனாதிபதி பின்வாங்கினார்


ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மீளப்பெறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குறித்த அவசரகால சட்டம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில், பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2வது பிரிவின் பிரகாரம், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, அவசர கால சட்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments