Breaking News

கொதித்தெழுந்த மக்கள்! வீதியை மறித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்


நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் பெற்றோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது.

போராட்டங்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு பதிலாக, மேலும் மேலும் சுமைகளே அதிகரிக்கின்றன.

இந்நிலையில், நேற்று அதிகரிக்கப்பட்ட பெற்றோல், டீசல் விலையால் மக்கள் பெரும் அவதிக்குட்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை அவிஸாவலையில் ஒன்றுகூடிய மக்கள் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இவர்கள், அவிஸாவலை – கொழும்பு பிரதான வீதியை மறித்து வாகனங்களை அப்பாதையூடாக செல்லவிடாமல் மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இதையடுத்து, குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments