Breaking News

தமிழர் படைத்த கின்னஸ் சாதனை - குவியும் பாராட்டுகள்


ஒரு நிமிடத்தில் அதிக தண்டால் எடுத்து தமிழ் இளைஞன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

நவிமும்பை சான்பாடா, கைலாஷ் சதன் பகுதியில் வசித்து வருபவர் மரிய ஞானம் நாடார். இவரது மகன் செபாஸ்டின். இவருக்கு சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு உள்ளது. எப்போதும் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவார்.

இந்தநிலையில் அவர் ஒரு நிமிடங்களில் 68 ஹேண்டு ரிலீஸ் புஷ்-அப்ஸ் (தண்டால்) எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அவரது சாதனையை பாராட்டி கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவரது இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். (Vavuniyan) 

No comments