நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம் !!காணாமல் போனோரின் உறவுகள்
எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே,நிதி வேண்டாம் நீதியே வேண்டும், பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே,அரசின் பொறுப்பற்ற பதில்களைகண்டிக்கின்றோம், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர். (Vavuniyan)
No comments