துப்பாக்கிச் சூட்டில் பலியான நபரின் இறுதி கிரியை இன்று: முப்படையினர் பலத்த பாதுகாப்பு
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறும், மூன்று நாட்களுக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஹிரிவடுன்ன, நாரன்பெத்த பகுதியைச் சேர்ந்த கே. பி. சமிந்த லக்ஷான் என்பவர் பலியானார்.
உயிரிழந்தவரின் இறுதிக் கிரியை இன்று (22) தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த, ஹிரிவடுன்னபகுதியில் இடம்பெறவுள்ளது.
இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் காவல்துறைமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 (1) வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, 21.03.2022 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி 2272/10 மூலம், கேகாலை மாவட்டத்துக்கு உட்பட்ட தேவாலேகம, ரம்புக்கன மற்றும் கேகாலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நேற்று முதல் இன்றுவரை ஆயுதம் தாங்கிய முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (Vavuniyan)
No comments