சனநடமாட்டம் குறைந்த வவுனியா நகர்!!
நாட்டில் இன்று தேசிய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் வவுனியா நகரில் சனநடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டது.
நாட்டில் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் அரசுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் தேசிய எதிர்ப்பு தினத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டதுடன் கர்த்தாலை அனுஸ்டிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா செட்டிகுளம் உட்பட புறநகர் பகுதிகளில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் வரவும் குறைவாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை இன்று காலை முதல் நகரப்பகுதிக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது (Vavuniyan)
No comments