Breaking News

சதொசவில் பொருட்களை வாங்க காலையிலேயே குவிந்த மக்கள்


வவுனியா சதொசவில் பொருட்களை வாங்க வந்த மக்கள் நீண்ட நேரமாக வரிசiயில் காத்திருக்க வேண்டிய நிலை இன்று காலை ஏற்பட்டிருந்தது.

சதொசவில் 1950 ரூபா பெறுமதியில் அரிசி, சீனி, பால்மா பற்கற், தேயிலைப்பக்கற் போன்ற பொருட்கள் வழங்கப்படுவதாக மக்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று காலை 6 மணியில் இரந்து மக்கள் சதொசவின் முன்பாக வரிசையில் நின்றனர்.

இந்நிலையில் காலை 9 மணியளவில் சுமார் 100 பேர் வரையில் வயோதிபர்கள் கைக்குழந்தைகளுடன் தாய்மார் என பலரும் காத்திருந்த நிலையில் பொருட்கள் வழங்குவதற்கு தமது கணனியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் பொருட்களை வழங்க முடியாதுள்ளதாகவும் ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காத்திருந்த மக்கள் முரண்பட தொடங்கிய நிலையில் பொலிஸார் வருகை தந்து மக்களை வரிசைப்படுத்தியதுடன் பொருட்களை வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு சதொச ஊழியர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில் சுமார் 9.45 மணியளவில் காத்திருந்த மக்களுக்கு குறித்த பொதிகள் 
வழங்கப்பட்டிருந்தது.(Vavuniyan)





No comments