தந்தை - மகனின் உயிரை பறித்த தொடருந்து விபத்து
பலபிட்டிய - வெலிவத்தை பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் தொடருந்து ஒன்றுடன், உந்துருளி ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் உந்துருளியில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (Vavuniyan)
No comments