Breaking News

இலங்கையின் அடுத்த நிதி அமைச்சர் இவரா? கடும் நெருக்கடியில் கோட்டா


நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்களிடம் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், அந்த அமைச்சர்களினால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிதியமைச்சர் பதவிக்கு பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரிடம் ஜனாதிபதி இன்று காலை கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அவர்கள் கோரிக்கையை நிராகரித்ததாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதுதொடர்பில்  நீதியமைச்சர் அலி சப்ரி மாத்திரமே சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

இன்று காலை புதிய நிதியமைச்சரை நியமிக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்

நிதியமைச்சராக பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுப்பதில் ஜனாதிபதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.(Vavuniyan) 


No comments