வவுனியாவில் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் ஆர்பாட்டம்
அரசாங்கதத்திற்கு எதிராக சுகாதார துறைசார்ந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலையில் இருந்து பேரணியாக சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அரசாங்கத்தில் இருந்து வெளியேறு, பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், எரிபொருளின் விலையேற்றத்தை குறை. போன்ற பதாதைகளை ஏந்தியிருந்ததோடு அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தார்.
இத்தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டத்தில்
வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள், சிற்றூழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments