Breaking News

பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு


லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும், லீசல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவாலும் அதிகரித்துள்ளது. 

குறித்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.

இதற்கமைய, லங்கா ஐஓசியின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு....

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய், 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 367 ரூபாய், யூரோ 3 பெற்றோல் ஒரு லீற்றர் - 347 ரூபாய், ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய், சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 327 ரூபாய். (Vavuniyan) 

No comments