புதுவருடதினத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!
வவுனியா புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்ள வீதியின் அருகில் இருந்த தூணுடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் தூக்கிவீசப்பட்ட இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
No comments