Breaking News

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!!


வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர்களை சோதனையிட்டனர்.

இதன்போது அவர்களது உடமையில் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளினை மீட்டனர். 

குறித்த இளைஞர்களை கைதுசெய்த பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.(Vavuniyan) 

No comments