வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் உயர் பீடம் கூடியது
தமிழரசுக்கட்சியின் உயர் பீடம் இன்று வவுனியாவில் கூடியது.
தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமாக தாயகத்தில் காலை 11 மணிக்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய உயர்பீடத்தின் சந்திப்பு மாலை 4 மணிக்கு முடிவடைந்திருந்தது.
குறித்த சந்திப்பில் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், துரைராசசிங்கம் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். (Vavuniyan)
No comments