உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் தீவிரம்
இந்நிலையில் ரஷ்யா திட்டமிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள லிவீவ் நகர மேயர், இதுவொரு இனப்படுகொலை எனவும் கூறியுள்ளார்.
உக்ரைனில் கடந்த இரவில் மட்டும் 315 இலக்குகள் தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் நான்கு ஆயுதக் களஞ்சியங்கள் உட்பட உக்ரைனின் 16 இராணுவ தளங்கள் இஸ்கந்தர் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டதாகவும் இரண்டு உக்ரைனிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு மேற்குலக நாடுகளில் இருந்து நவீன ஆயுத விநியோகம் கிட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ரஷ்ய தாக்குதல்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதை தற்போதைய கடும் தாக்குதல்கள் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக உக்ரேனிய இராணுவத்தின் இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் தொடரூந்துக் கட்டமைப்புக்கள், இராணுவப் எரிபொருள் விநியோக தளங்கள், பயிற்சி முகாம்கள் உட்பட்ட தளங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
எனினும் ரஷ்யா பொதுமக்கள் மீதே தாக்குதல்களை தொடுப்பதாகவும், லிவீவ் நகரில் நடத்தப்பட்ட உந்துகணை தாக்குதலில் குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் லிவீவ் நகர மேயர் கூறியுள்ளார். (Vavuniyan)
No comments