வவுனியாவிலும் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டம்!!
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து தரப்பினர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டமையால் பதட்டமான சூழல் ஏற்ப்பட்டிருந்தது.
குறிப்பாக வெளிமாகாணங்களிற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் எ9 வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டு போக்குவரத்தினை தடை செய்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் போராட்டத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
குறித்த போராட்டம் காரணமாக எ9 வீதியுடனான போக்குவரத்து பலமணி நேரங்கள் தாமதமாகியிருந்தது.
No comments