வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற “உள்ளம்” காலண்டு சஞ்சிகை அறிமுக விழா
“உள்ளம்" காலாண்டு இதழ் சஞ்சிகை அறிமுக விழா வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் கலாநிதி அகளங்கன் தலைமையில் இன்று சிறப்புற நடைபெற்றது.
நூலை வவுனியா பிரதேசசெயலாளர் நா.கமலதாசன் அறிமுகம் செய்ய திரு திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா தம்பதிகள் மற்றும் திரு.திருமதி. விஜேந்திரன் தம்பதிகள் நூலின் முதற் பிரதியை பெற்று விழாவைச்சிறப்பித்தனர்.
நூலிற்கான நயவுரையை 35 இலக்கிய செயற்பாட்டாளர்கள் நிகழ்த்தியதுடன் 15 வளர்ந்து வரும் கலைஞர்கள் இணைந்து நிகழ்வை தொகுத்து வழங்கினர்.
நிகழ்வில் 200 வரையான பார்வையாளர்களில் மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் பங்குபற்றல் அதிகமாக இருந்தமை சிறப்பம்சமாகும்.
ஒரு சனசமூக நிலையத்தின் மூலம் சஞ்சிகை வெளிவருவதை பலரும் பாராட்டியிருந்தனர். (Vavuniyan)
No comments