Breaking News

வவுனியாவில் தராக்கி சிவராமின் நினைவு தினம் அனுஸ்டிப்பு


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சி. வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழறிஞர் தமிழருவி த. சிவகுமாரன், முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் இரவீந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தீபமேற்றியும் பிரார்த்னை செய்யப்பட்டது.

இதேவேளை தராக்கி சிவராம் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்ததுடன் சங்கத்தின் முக்கியஸ்தர் கி. வசந்தரூபனால் நின்றியுரையும் நிகழ்த்தப்பட்டது. (Vavuniyan)










No comments