உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - ரஷ்ய படைகளிடம் ஆயிரக்கணக்கில் சரணடைந்த உக்ரைன் இராணுவத்தினர்
இது தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மரியுபோலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்கள் சரணடைந்துள்ளனர். 36வது மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 1,026 உக்ரைனியப் படைவீரர்கள் தாமாக முன்வந்து ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தனர்” என்று தெரிவிக்கின்றது.
இதனிடையே ரஷ்ய இராணுவத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிடப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய துறைமுக நகரமான மரியுபோல் தற்போது ரஷ்யா வசமாகியுள்ளது.
கிழக்கு உக்ரைன் தாக்குதலின் ஒரு பகுதியாக, மரியுபோலைக் கைப்பற்றுவதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தென்கொரிய நாடாளுமன்றத்தில் நேற்று காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி(Vladimir Zhelensky) தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments