பொலிஸார் விடுத்த விசேட அறிவிப்பு
நாட்டில் இடம்பெறுகின்ற சில போராட்டங்களில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோர் வீடியோ ஊடாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எந்தவொரு நபருக்கும் உரிமை உள்ளது என்றாலும், அமைதியின்மையை தோற்றுவித்து, வன்முறைகளை ஏற்படுத்த முயற்சிப்போர் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. (Vavuniyan)
No comments