Breaking News

இன்றும் கொள்கலன் தாங்கிகளுக்கு எரிபொருள் இல்லை


இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் கொள்கலன் தாங்கிகளில் எரிபொருளை நிரப்பும் முனையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் இன்றைய தினமும் கொள்கலன் தாங்கிகளில் எரிபொருளை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

அச்சங்கத்தின் தலைவர் செல்டன் பெர்னாண்டோ இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

ஞாயிற்றுகிழமை என்பதால் குறித்த முனையங்களின் சேவையாளர்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் தற்போதைய நிலையில் விசேட கொடுப்பனவு வழங்கியாவது, குறித்த கொள்கலன் தாங்கிகளில் எரிபொருளை நிரப்பும் முனையங்களின் சேவையாளர்களை பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டிருந்த எரிபொருள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் இன்மையால், கூட்டுதாபனத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றைய தினமும் மூடப்பட்டிருந்தன.

திறக்கப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றிரவு வரையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. (Vavuniyan) 

No comments