Breaking News

உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத், கொழும்பு காலி முகத்திடலில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

7வது நாளாக தொடரும் தன்னெழுச்சி போராட்டத்தில், இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளார்.

24 மணிநேர உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தம்மிக்க பிரசாத் அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நியாயத்தை பெற்றுத் தர கோரியும், இளைஞர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். (Vavuniyan) 

No comments