வவுனியாவில் மகிந்த,கோட்டா பதவி விலகவேண்டும்!! விண் அதிர்ந்தன கோசங்கள்!! வவுனியாவின் இயல்பு வாழ்க்கை பதிப்பு!!
பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று கோரியும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வவுனியாவில் பூரணஆதரவு வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பாக வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய தொழிற்சங்க உறுப்பினர்கள் பாரிய ஆர்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அங்கிருந்து கொறவப்பொத்தான வீதி வழியாக பேரணியாக சென்று பசார்வீதிவழியாக கண்டிவீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோசம் எழுப்பினர்.
குறித்த அலுவலகங்களிற்கு முன்பாக அரசுக்கு ஆதரவு வழங்காதே என்ற பதாதைகளை காட்சிப்படுத்தியதுடன் அலுவலகத்தின் சுவர்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பொறித்துவிட்டுசென்றனர்.
இதேவேளை இன்றையதினம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், தினச்சந்தை, பாடசாலைகள், அரச திணைக்களங்கள் வங்கிகள் ஆகியவற்றின் செயற்பாடுகள் முற்றாக முடங்கின.
நகருக்கு வருகைதந்த பொதுமக்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைவடைந்த நிலையில் காணப்பட்டதுடன் போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்தது.
மதியம் 2 மணி வரை இடம்பெற்ற குறித்த ஆர்பாட்டத்தில் தபால் திணைக்கள ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரக்கு எதிரான கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
No comments