Breaking News

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல்வாதி மீது தாக்குதல்


திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகள் தாக்கப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இலங்கையில் அல்ல பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்த எம்.பி ஒருவர் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டவேளை அங்கிருந்தவர்கள் அவரை கூட்டமாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்து ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments