Breaking News

வவுனியா வைத்தியர்களினால் ஆர்ப்பாட்ட பேரணி


வவுனியா வைத்தியசாலையின் முன்பாக வைத்தியர்களினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்பாட்ட பேரணியானது இன்று மதியம் 01.00 மணியளவில்  வவுனியா வைத்தியசாலை வைத்தியர் விடுதியில் ஆரம்பமாகி, வவுனியா வைத்தியசாலைக்கு முன் வருகைதந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது மருந்துகள் இல்லை சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம், நோயுற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுங்கள் போன்ற அரசுக்கெதிரான பல்வேறு கோசங்ககளை எழுப்பியவாறு, பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.










No comments