போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் புலனாய்வு பிரிவினரால் கைது
அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கொழும்பு காலி முகத்திடலில் இன்று 6ஆவது நாளாக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்பொழுது புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments