Breaking News

02 எரிவாயு கப்பல்களுக்கு இன்று கட்டணம்


இரண்டு எரிவாயுக் கப்பல்களுக்காக இன்று 7 மில்லியன் டொலர்களை செலுத்த எதிர்பார்ப்பதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு கப்பல்களில் இருந்து எரிவாயுவை தரையிறங்கியதன் பின்னர் இரண்டு வாரங்களுக்கு போதுமான  எரிவாயு நாட்டில் இருக்கும் என அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

லிற்றோ எரிவாயு நிறுவனத்தில் தற்போது ஆறு நாட்களுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும், 80,000 சிலிண்டர்களை சந்தைக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.

80,000 சிலிண்டர்களில் 50,000 கோப் குழுவின் பரிந்துரையின் பேரில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan) 


No comments