Breaking News

2 ஆயிரம் கோடி இழப்பு


நாட்டில் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலவர நிலையில், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என இவ்வாறு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஆர்பாட்டங்கள் என்ற போர்வையில் சேதம் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் தலைமையகத்தினால் குறித்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என பொலிஸ்  தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments