Breaking News

வவுனியாவில்`ரெலோ` குகனின் 23 வது நினைவேந்தல்!!


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகன்) அவர்களின் 23வது நினைவு தினம் வவுனியா வைரவப்புளிங்குளம் `யங் ஸ்ரார்` விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் இன்று இடம்பெற்றது.  

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் அன்னாரது தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

நிகழ்வில்  முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.(Vavuniyan) 

No comments