Breaking News

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்


சிறிலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்க வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

27ஆம் திகதி ஆரம்பமான போட்டிகள் 30 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது

தெரிவு செய்யப்படும் வீர வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர். (Vavuniyan) 

No comments