கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மாயம்
முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
அளம்பிலை சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன் (29) பத்மநாதன் விஜித் (26) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் செம்மலை கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு காவல்துறையினர் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. (Vavuniyan)
No comments