Breaking News

வன்முறைச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்



நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்முறைச் வம்பவங்களின்போது, 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அவர்களுக்கு விரைவாக புதிய வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments