Breaking News

’பசிலை வெளியேற்றி இரண்டையும் பாதுகாப்போம்’


21 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பசில் ராஜபக்‌ஷவை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றி நாட்டையும், பாராளுமன்றத்தையும் பசிலிடமிருந்து காப்பாற்றுவோமென தெரிவித்த  சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, மருந்து தட்டுப்பாடுகளாலும், பட்டினியாலும்  மக்கள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை பார்த்து நான் எப்போதும் அச்சப்பட்டதில்லை. அவ்வாறு பயம் இருந்திருந்தால், நிதி அமைச்சராக அவர் செயற்பட்ட அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு அவருக்கு எதிராக போராடியிருக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற அதிகாரம் பசிலிடம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், 21ஆவதுதிருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து இரட்டைக் குடியுரிமைக் கொண்ட பசில் ராஜபக்‌ஷவை  பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றி பாராளுமன்றத்தையும் நாட்டையும் காப்பாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்கிற நம்பிக்கை எமக்கில்லை. ஆனாலும் நாடு குழியில் விழுந்துள்ளது. எனவே இப்போது கட்சி அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டை குழியிலிருந்து மீட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“கோட்டா கோ கம”, “ரணில் கோ கம” என்பற்றை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டை கட்டியெழுப்பநடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் விரைவாக தேர்தலுக்கு செல்ல வேண்டும். தேர்தல் ஒன்று நடந்தால் யார் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்எனவும் தெரிவித்தார். 

அடுத்த மாதத்தில் பட்டினியாலும், மருந்து பொருள்கள் இல்லை என்பதாலும் மக்கள் வீதியில் உயிரிழக்க வேண்டிய நிலையொன்று ஏற்படலாம் .மேலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நிதி அதிகாரம், கண்காணிப்பு அதிகாரத்தை வழங்குவதற்கு நாம் இணங்குவதோடு, பிரதமரால் முன்வைக்கப்படும் இந்த யோசனைகளுக்கு ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்தார். (Vavuniyan) 

No comments