இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல்
இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மக்கள் வரிசையில் நிற்கவேண்டாமென கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றில் இன்று (19) உரையாற்றிய அவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வெளியான தகவல் பொய்யானவை என தெரிவித்தார்.
நேற்று இரவு பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று நாட்டிற்கு வந்ததாகவும், அதிலிருந்து பெற்றோலை இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே, நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (Vavuniyan)
No comments