Breaking News

பிரதமராகிறார் ரனில் விக்ரமசிங்க? கோட்டாவுடன் சந்திப்பை அடுத்து முடிவு


அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதைத் தொடரந்து, இலங்கையின் பிரதமராக ரனில் விக்ரமசிங்க பதியேற்வுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலை அடுத்து இருவருக்குமிடையிலான திடீர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அப்போதைய அரச தலைவரான மகிந்த ராஜபக்ச முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னரே தமது அதிகாரத்தை கைவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரனில் பிரதமராகப் பதிவியேற்கவுள்ளதாகவும், அதற்கான ஆதரவை கட்சிகளிடம் அவர் சார்ந்தவர்கள் கோரி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (Vavuniyan) 

No comments