Breaking News

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வோர் எண்ணிக்கை உயர்வு



இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 50821 பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது கடந்த 2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 286 சதவீதம் அதிகமாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25224 பெண்களும் 13441 ஆண்களும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

இவர்களில் 12701 பேர் குவைத்திற்கும், 11 ஆயிரம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் 1754 பேர் தென் கொரியாவிற்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments