எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியது
நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அதன் தலைவர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாதுகாப்பு கருதி கடந்த திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று பிற்பகல் முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் வழமைபோல் இடம்பெறுவதுடன், அதற்காக சகல தாங்கி ஊர்திகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan)
No comments