Breaking News

அறிமுகமான முதல் சீஸனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ்


ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தீர்மானித்து களமிறங்கியது.

அதனடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 131 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில் அறிமுகமான முதல் சீஸனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. (Vavuniyan) 

No comments