வவுனியா குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக அதிகளவான மக்கள்
வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக அதிகளவான மக்கள் கூட்டம் கடவுசீட்டினை பெறுவதற்கு இன்றையதினம் (05) காத்திருப்பதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நாட்டிலுள்ள பொது மக்களுக்கு முக்கிய தொழிநுட்ப கோளாறு காரணமாக செயற்பாடு நடைபெறாது என அறிவிப்பை வழங்கியும் மக்கள் கடவுசீட்டினை பெறுவதற்கு வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக அதிகளவு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.
அதன்படி கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு நேற்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு பின்னர் வழமைக்கு திரும்பியதாகவும் கொழும்பு தலமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்த இந்நிலையில் கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இன்றையதினம் (05) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் இச் செயற்பாடு இன்று இடம்பெறாது என வாயிலில் அறிவுறுத்தல் வழங்கியும் மக்கள் அதிகமாக கடவுசீட்டினை பெறுவதற்கு காத்திருப்பதனை அவதானிக்க முடிந்தது. (Vavuniyan)
No comments