ஆட்சியாளர்களை தக்க வைப்பதற்காக நெருக்கமானவர்களால் வெளிடப்பட்ட செய்தியே விடுதலைப்புலிகளின் தாக்குதல்
தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சியில் தக்க வைப்பதற்காக அவர்களின் நெருக்கமானவர்களின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியே விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளார்கள் என்ற செய்தியாகும் என முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும் அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்டவருமான பொ. ஆரவிந்தன் தெரிவித்தார்.
நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மே 18 தொடராக தமிழினத்தின் மீது நடத்தப்பட்டு வந்த இன அழிப்பின் அடையாளமாகும். ஆன்றைய தினம் ஒட்டுமொத்தமாக இறந்த பொதுமக்களின் நினைவு நாளாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இவ்வாறான புனிதமான நாளில் இனபோதமற்று அனைவரும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்து தீபமேற்ற வேண்டும் என வேண்டுகின்றேன்.
மே 18 இல் விடுதலைப்புலிகளால் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக இந்தியாவின் புலனாய்வு தகவலாக இந்தியாவின் பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது. ஆகவே அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் அந்த பத்திரிகை இலங்கையின் ஆட்சியாளர்களோடு நெருக்கமானவர்களாக காணப்படுவதோடு அவ்வாறான செய்தி இலங்கையின் ஆட்சியாளர்களை தொடர்ந்தும் ஆட்சியில் தங்க வைப்பதற்கான ஓர் அங்கமாகவே வெளியிடப்பட்டுள்ளது.
சகரானினுடைய தாக்குதலும் இந்தியாவில் திட்டமிடப்பட்டு இலங்கையில் நடத்தப்பட்டது. எனவே இவ்விடயத்தில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
முன்னாள் விடுதலைப்புலிகள் என்ற வகையில் இதற்கு நாம் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதேபோன்றதாக தாக்குதல்களை இந்த அரசாங்கம் திட்டமிட்ட நடத்தியே ஆட்சியை கைப்பற்றினார்கள் என்ற பெரு நம்பிக்கை தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களிடம் இருக்கின்றது. இதேபோன்றதான நிலையிலேயே சிங்கள தமிழ் மக்களை குழப்பி விடுவதற்கும் தங்களது ஆட்சியை தக்க வைப்பதற்குமே இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
No comments