Breaking News

வவுனியாவிலும் முழு கடையடைப்பு நடத்த ஏற்பாடு - ஏற்பாட்டு குழு தெரிவிப்பு


இலங்கை பூராகவும் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம. ஜெகரீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாளைய தினம் நாடுபூராகவும் பூரண கர்த்தலை அனுஸ்டிப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரச அரச சார்பற்ற தனியார் தொழிற்சங்கங்கள் செய்யவுள்ளது.

நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்களது வாழ்வை கொண்டு நடத்த கஸ்டப்படும் நிலையில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு திர்வை காண்பதை விடுத்து இந்த பிரச்சனையை மேலும் விரிவடையச்செய்து மக்களை துன்புறுத்தக்கூடிய நிலையை தோற்றுவித்துள்ளது. எனவே இதனை பொறுது;துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

இதன்போது ஏற்பாடு குழு சார்பில் இணைந்த மொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

No comments